Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Sudharshini / 2015 மே 24 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், வடகிழக்கில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. அதேபோன்று போதைப்பொருள் பாவனையும் அதிகரித்துள்ளதென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு யாரும் முன்வரக்கூடாது என்பதை வலியுறுத்தியும் கொலைச் சம்பவத்தினை கண்டித்தும் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில்; இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
அதிகளவான மதுபாவனையே இவ்வாறான கொடூர செயல்களுக்கு காரணமாகின்றது. வித்தியாவின் படுகொலை, வடகிழக்கை மட்டுமல்ல முழு இலங்கை மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நாட்டில் நிலவும் நல்லாட்சி காரணமாகவே இன்று மக்கள் சுதந்திரமாக தமது எதிர்ப்பினை நடத்த முடிகின்றது. யாழில் நீதிமன்றம் தாக்கப்பட்ட போது அவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சியில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றிருந்தால் அங்கு துப்பாக்கி சூடே நடாத்தப்பட்டிருக்கும்.
தமிழனத்துக்கு இன்று பேரிடி ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள பிரச்சினை காரணமாக உருவான யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், இந்த நாட்டில் மிக மோசமான நிலைமை தோன்றியுள்ளது. பலர் காணாமல்போனார்கள், பலர் கொல்லப்பட்டனர். இறுதியாக மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வித்தியாவின் படுகொலை தமிழ் இனத்தின் இறுதிப்படுகொலையாக இருக்கவேண்டும். கடைசியாக நடைபெற்ற வன்முறையாகவும் இருக்கவேண்டும்.
குறிப்பாக யாழ்குடாவில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கதையாக இருக்கின்றன. யாழில் போதைப்பொருட்களும் மட்டக்களப்பில் மதுபானமும் கூடுதலான விலைபோகும் நிலையுள்ளது. இவை நிறுத்தப்படவேண்டும். இன்னும் இன்னும் மதுபானசாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இது தமிழர்களின் பொருளாதாரத்தினையும் கலாசாரம் உட்பட ஏனைய விடயங்களில் இழப்பினை ஏற்படுத்தக்கூடியதாகும் என அவர் தெரிவித்தார்.
கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்திலிருந்து பேரணியொன்றும் பெரியகல்லாறு மெதடிஸ் தேவாலயத்துக்கு அருகில் இருந்து வந்த பேரணியும் கோட்டைக்கல்லாறு பாலத்தடியில் ஒன்றிணைந்து அங்கு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago