2025 மே 17, சனிக்கிழமை

'செஞ்சிலுவைச் சங்கம் சொந்தக்காலில் நின்று செயற்படவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 மே 25 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் எதிர்காலத்தில் தனது சொந்தக்காலில் நின்று செயற்படவேண்டியுள்ளது என்று அச்சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் ரி.வசந்தராசா தெரிவித்தார்.

சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில்  நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் பொதுச்சபை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த  அவர், 'இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இப்போது பணம் வருவதில்லை. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அந்தந்த  மாவட்ட கிளைகள் தனது சொந்தக்காலில் நின்று செயற்படவேண்டும் என்று  எமது தலைமைக்காரியாலயம் கோரியுள்ளது. கிளைகளே நிதியை  தேடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்தை  மேற்கொள்வதற்காக 12 மில்லியன் ரூபாய் நிதி ஒக்ஸ்பாம் நிறுவனத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேசத்தில் முதலாவதாக முதலுதவிப் பயிற்சிகளை வழங்கவுள்ளோம்.

நிதி இல்லாமல் செயற்படுவது என்பது பாரிய சவாலாகும். எமது தொண்டர்கள் கடந்த காலத்தில் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியது போன்று தொடர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தனது பனிகளை தொடர்ந்து மேற்கொள்ளும்' எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தின்போது தலைவராக ரி.வசந்தராசா, செயலாளராக எஸ்.மதிசுதன், பொருளாளராக வி.சக்திவேல், உப தலைவராக எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .