2025 மே 17, சனிக்கிழமை

இனப்பிரச்சினைக்கு தீர்வு மைத்திரியின் ஆட்சியிலேயே கிடைக்கும்: பொன்.செல்வராசா

Suganthini Ratnam   / 2015 மே 25 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவேண்டுமாக இருந்தால்,  அது தற்போதைய ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் கிடைக்குமே  தவிர,  வேறெந்தவொரு ஆட்சியிலும் நடைபெறமாட்டாது.  இதற்கு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு பக்கபலமாக இருக்கவேண்டும் என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா  தெரிவித்தார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் 30 இலட்சம் ரூபாய் செலவில்  அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து  தரிப்பிடத்துக்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள  நல்லாட்சி  இல்லாமல் போகுமோ என்ற ஏக்கம் உள்ளது.  நாடாளுமன்றத்தில்  ஸ்திரத்தன்மையை காட்டமுடியாத  நிலைமை உள்ளது.  இந்த நிலையில்,  நாடாளுமன்றத்தையும்  மிக விரைவில் கலைத்தேயாகவேண்டும். நாடாhளுமன்றம் கலைக்கப்பட்ட  பின்னர் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நல்லாட்சி மீண்டும் வருமா? என்று  நாங்கள் எண்ணுகின்றோம்.

எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்று அரசாங்கத்துக்கு பக்கபலமாக  நின்று  எமது இனப்பிரச்சினை சுமுகமாக  தீர்க்கப்படும்.  இதற்கு எமது தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் சிறந்தமுறையில் தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு ஒருமித்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும்' எனத் தெரிவித்தார்.  

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திகளுக்கு தடையானது அல்ல.  கடந்த அரசாங்கத்தில் கூட அபிவிருத்திச் செயற்பாடுகளில் நாங்கள் செயற்பட்டோம். தற்போதைய அரசாங்கத்திலும் கூட அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பதுடன், ஏனைய நல்ல செயற்பாடுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்கின்றது' எனவும் அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .