Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Sudharshini / 2015 மே 24 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்,பைஷல் இஸ்மாயில், கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்கு மாகாணத்தில் தனியார் நிறுவனங்களை அமைத்து, கல்வியை தொடர முடியாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு அதன் மூலம் தொழில் வாய்ப்பினை வழங்கும் நோக்கில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேற்கொண்ட முயற்சியால் மாலை தீவு, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து 12 பேர் கொண்ட குழுவினர் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
மாலைதீவின் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் முஹமட் சக்கீல் தலைமையில் 12 பேர்கொண்ட குழுவினர் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சரை நேற்று (23) சந்தித்து கலந்துரையாடினர்.
மேலும், குறித்த முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகளை நிறுவும் முகமாக பல இடங்களையும் பார்வையிட்டனர்.
கிழக்கு மாகாணத்திலிருந்து எந்தப் பெண்களும் வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்லக்கூடாது. அதுபோன்று இளைஞர்கள் சாதாரணத் தொழிலாளியாகச் செல்லக்கூடாது. அவர்கள் அங்கு சென்று மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் தொழில் செய்து ஒவ்வொருமாதமும் பெற்றுக்கொள்ளும் சம்பளத்தினை பெருகின்றனர்.
இலங்கையில் தொழிற்பேட்டைகளை அமைப்பதால் அதில் இருந்து தன் ஊரில், தன்குடும்பத்துடன் இருந்து சந்தோசமாக தொழில் புரிய முடியும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்க்கிணங்க கிழக்கில் பெருமளவிலான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கடந்த மாதம் 2,000 யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் ஆடைத்தொழிற்சாலையுடன் பயிற்சி நிலையமும் ஏறாவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 hours ago
16 May 2025