2025 மே 17, சனிக்கிழமை

கலந்துரையாடல்

Sudharshini   / 2015 மே 25 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாநாகர சபை எல்லைப் பிரதேசமான மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், பிரதித் தவிசாளர், சபை உறுப்பினர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (24)  விஜயமொன்றை மேற்கொண்டு பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுடன் கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

அத்தோடு வீதி மின் விளக்கு அமைத்தல், பிரதேச கோயில்கள் புனரமைப்பு, வீதி புனரமைப்பு பற்றியும் மக்களால் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதன்போது பிள்ளையார் ஆலயம், கண்ணகியம்மன் ஆலயம், வீரபத்திரர் ஆலயம் என்பற்றையும் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

மஞ்சந்தொடுவாய் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தலைமையில் சனசமுக கட்டடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், சபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .