2025 ஜூலை 05, சனிக்கிழமை

சவுதிக்கு ஹிஸ்புல்லாஹ் பயணமானார்

Gavitha   / 2015 மே 25 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பழுலுல்லாஹ் பர்ஹான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் , சவூதி அரேபியாவுக்கு இன்று திங்கட்கிழமை (25) மதியம் பயணமானார்.

ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி அமைப்பினூடனான கலந்துரையாடலில்  கலந்து கொள்வதற்காகவே அவர் சவுதிக்கு சென்றுள்ளார்.

இவர் முதலில், உம்ரா கடமையை நிறைவேற்றிவிட்டு அதன் பின்னர் ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி அமைப்பின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லாஹ் அஸ் ஷிர்கியையும் சர்வதேச இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியினுடைய தலைவர், முஸ்லிம் சமய கலாசார வக்பு அமைச்சினுடைய பிரதிநிதிகள், உயர் கல்வி அமைச்சினுடைய பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ரியாத் இமாம் சுஊத் பல்கலைக்கழகத்துடன் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியை இணைந்து செயற்படுவதற்கான உடன்படிக்கைகளிலும் இதன்போது ரியாத் பல்கலைக்கழகத்தில் கைச்சாத்திடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மேற்படி விஜயத்தில், ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேஷனுடைய பல நடவடிக்கை தொடர்பாகவும் பல்வேறுபட்ட தலைவர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், இரண்டு வாரம் சவூதியில் தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .