2025 ஜூலை 05, சனிக்கிழமை

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு செயலமர்வு

Thipaan   / 2015 மே 26 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ். பாக்கியநாதன்

எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கோடு, கன்னங்குடா மகா வித்தியாலய மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு பாடசாலை மண்டபத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்றது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் கற்றும் மாணவர்கள் இந்த விழிப்புணர்வு செயலமர்வில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் அதிகரித்துவரும் பாலியல் தொடர்பான நோய்கள் மற்றும் எச்.ஐ..வி. எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மருத்துவப் பிரிவினால் இந்த விழிப்புணர்வுச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது என அப்பிரிவுக்கு பொறுப்பான  வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் எச்.ஐ..வி. எய்ட்ஸ் தடுப்புப் பிரிவின்  பொறுப்பு  வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர், எயிட்ஸ் நோயின் தாக்கங்கள், நோய் ஏற்படும் சந்தர்பங்கள் மற்றும் நோய் ஏற்படாமல் கட்டுப்படுத்தும் விதங்கள் பற்றிய கருத்துக்களையும் விரிவுரைகளையும் வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எச்.ஐ..வி. எயிட்ஸ் தொற்றினால் இதுவரையில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற விழிப்புணர்வு கருத்தரங்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மருத்துவப் பிரிவினால் அமுலாக்கம் செய்யப்படுவதாக வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .