Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 மே 27 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மண்டூரில் சமூகசேவை உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அவர் புதன்கிழமை(27)விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மண்டூரில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட சமூக சேவை உத்தியோகத்தரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் சமூகசேவை உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமூகசேவை உத்தியோகத்தர் மதிதயான் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் மீண்டுமொரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இக் காலகட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது தமிழ் மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
உண்மையில் சம்பவத்தின் சூத்திரதாரிகள் குறித்தும் சம்பவம் இடம்பெற்றதற்கான காரணங்கள் குறித்தும் உடனடியாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்க வேண்டியது பாதுகாப்பு தரப்பினரின் பொறுப்பாகும்.
குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகளை கைது செய்து துப்பாக்கி கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
இவ்வாறான சம்பவங்கள் காரணமாக, கிழக்கு மாகாணத்தின் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக வழியிலான அனைத்து செயற்பாடுகளும் அச்சம் காரணமாக முடங்கிவிடும் என்பதே யதார்த்தம்.
எனவே இதன் உண்மைகளை விரைவாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்து உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025