Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 மே 27 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமைபுரியும் அரசாங்க உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமைபுரியும் சமூக சேவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள், இன்று புதன்கிழமை (27) காலை முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டூரில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) படுகொலை செய்யப்பட்ட நாவிதன்வெளி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தரின் படுகொலையை கண்டித்தும் அதன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறும் கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கு அனுப்புவதற்கான மகஜரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.
'நல்லாட்சியில் எமது பாதுகபாப்பை உறுதிப்படுத்த குற்றவாளியை உடனடியாக கைது செய்' போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் இவர்கள் ஏந்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
8 hours ago
16 May 2025