2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பாதுகாப்பற்ற மின்மாற்றியால் பொதுமக்கள் அச்சம்

Sudharshini   / 2015 மே 27 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்துக்கு அருகில் பாதுகாப்பற்றி நிலையில் மின்மாற்றி  ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இந்த மின்மாற்றி  ஆபத்தான நிலையிலே குறித்த இடத்தில் காணப்படுவதாகவும் முதலமைச்சரின் காரியாலயத்துக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், குறித்த மின்மாற்றி அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென சுட்டிக்காட்டினர்.

இவ்விடயம் குறித்து பிரதேச இலங்கை மின்சார சபையின் காரியாலயத்துக்கு அறிவித்த போதிலும், இது குறித்து எவ்வித  நடவடிக்கைகளையும் மின்சார சபையினர் முன்னெடுக்க வில்லை எனவும் அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் ஏறாவூர் காரியாலயம் இது குறித்து கவனத்திற்கொண்டு இந்த மின்மாற்றியை சிரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .