Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 28 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
போலி நிதி நிறுவனங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டாமென்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் முறையான அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களையே மக்கள் நாடவேண்டுமென்று இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் நுண்கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் குழுத் தலைவர் ஆர்.ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட 25 வர்த்தக வங்கிகள் உள்ளன. அவற்றில் அரச வர்த்தக வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் என்றும் உள்ளன. 9 விசேட வங்கிகளும் உள்ளன.
இதேபோன்று அங்கிகரிக்கப்பட்ட 48 நிதி நிறுவனங்களும் உள்ளன. இவை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி வெளிப்படுத்தி வருகின்றது' என்றார்.
'அங்கிகரிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளையும் நிதி நிறுவனங்களையுமே தங்களது கொடுக்கல், வாங்கல்களுக்கு மக்கள் பயன்படுத்தவேண்டும்.
மக்களின் பணத்தை பாதுகாத்து அதை ஒழுங்கு முறையாக பேணுவதற்காக மத்திய வங்கி செயற்பட்டுவருகின்றது. 24 மணி நேரமும் இலங்கை மத்திய வங்கி அதன் அனுமதி பெற்ற வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் கண்காணித்து வருகின்றது' எனவும் அவர் கூறினார்.
நிதி கையாழுகை தொடர்பான அறிவை விருத்தி செய்தல்' எனும் இக்கருத்தரங்கில், மக்கள் வங்கியின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் எம்.வலிதூர், மக்கள் வங்கியின் காத்தான்குடி முகாமையாளர் எஸ்.அழகுராஜா, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 hours ago
16 May 2025