2025 மே 17, சனிக்கிழமை

'ஒரு துண்டுக் காணிக்கு உரித்தின்றி இருக்கக்கூடாது'

Suganthini Ratnam   / 2015 மே 28 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

குடியிருக்கும் ஒரு துண்டுக் காணிக்கு உரித்தில்லாமல் எவரும் இருக்கக்கூடாது என்பதே இந்த நல்லாட்சியின் பொருளாகும்;  என்று  கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 52 குடும்பங்களுக்கு காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள்  நேற்று புதன்கிழமை மாலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கடந்த யுத்தத்தின்போது வாழ்விடம், அசையும், அசையாச் சொத்துக்களை கிழக்கு மாகாண மக்கள்  இழந்ததுடன், இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களுக்கு காணி உரிமை கூட இல்லாமல் போனது' என்றார்.

'தங்களின்  பூர்வீக வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்த   மக்கள், தற்போது சொந்த இடங்களில் மீள்குடியேறி வருகின்றார்கள்.  எனினும்,  கடந்த அரசாங்கம்  இந்த அப்பாவி மக்களின் காணி விடயத்தில் அவர்கள் வாழ்வதற்காக ஒரு துண்டுக் காணிக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்காமல்  இழுத்தடிப்புச் செய்துவந்தது. அத்துடன்,  மக்களின் காணிகளையும் கடந்த அரசாங்கம் அபகரித்தது. அதற்கு சிறந்த உதாரணம் சம்பூர் மக்கள்' எனவும் அவர் கூறினார்.

சமூர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மாகாண காணி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், கோறளைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .