2025 மே 17, சனிக்கிழமை

'குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிடின் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்'

Suganthini Ratnam   / 2015 மே 28 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் கிராமத்தில்  சமூகசேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயான் (வயது 44) சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில்  குற்றவாளிகளை  ஒரு வாரத்துக்குள்   கைதுசெய்யாவிடின், பொதுமக்களுடன் இணைந்து வெகுஜன போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்று  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  பொன். செல்வராசா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம், மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

சமூகசேவை உத்தியோகஸ்தரின் படுகொலையை  கண்டித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நல்லாட்சி நிலவும் இந்த வேளையில் இவ்வாறான செயற்பாடுகள் மக்களை மாத்திரமின்றி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மக்கள் மத்தியிலுள்ள அச்சத்தை போக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளதுடன், இதை  அவர்கள் செய்வார்கள் என்று நம்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .