Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 28 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பில் மீண்டும் ஆயுத கலாசாரம் தலை தூக்கியுள்ளது போன்று பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ள மண்டூரில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தின் பின்னணி தொடர்பாக பொலிஸார் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளப்படுத்தவேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'ஜனநாயக ரீதியாக அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் இவ்வேளையில் சமூகசேவை உத்தியோகஸ்தர் மீதான சூட்டுச் சம்பவம் மக்கள் மத்தியிலும் சமூக அலுவலகர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட சமூகசேவை உத்தியோகஸ்தரான சச்சிதானந்தம் மதிதயான் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது' என்றார்.
'அலுவலக ரீதியாக மட்டுமன்றி, பொதுவாழ்விலும் ஆன்மிகத்துக்காகவும் சமூகத்துக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இவரின் மறைவு மிகவும் துக்ககரமானது. மட்டக்களப்பில் அதிகரித்து வரும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட்டு சட்டத்துக்கு முன் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
8 hours ago
16 May 2025