2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கால்நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் மிக நீண்ட காலமாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலே தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றார்கள் என போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்பு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்தார்.

தும்பண்கேணியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்பு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கும் மேற்படி சங்க உறுப்பினர்களுக்குமிடையிலான சந்தித்து நேற்று வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் இப்பகுதியில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழல்; இன்றும்; இப்பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களை பாதித்துள்ளது. மேலும், மேச்சல்தரைப் பிரச்சனை, வீதிகள் புனரமைப்புச் செய்யப்படாமை, பண்ணையாளர்களுக்கு தேவையான பயிச்சிகள் வழங்கப்படாமை, கால்நடைகளுக்குரிய மருந்து வகைகள் இன்மை போன்ற பல பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.

போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்பாளர்களை ஒன்றிணைத்து கடந்த மாதம் ஒரு சங்கத்தினை உருவாக்கியுள்ளோம். இச்சங்கத்தினூடாக இப்பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சனைகளை வெளி கொண்டுவர முடியும்.

மேலும் எமது பிரதேசத்திலுள்ள அனைத்து கால்நடை வளர்ப்பாளர்களிடமிருந்தும் பால் கொள்வனவு செய்து சுத்தமான தயிர், யோகட் போன்றவற்றை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளோம். எனவே, எமது பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பாள்களின் அடிப்படைப் பிரச்சனைகளை பூர்திசெய்துதர அனைவரும் முன்வரவேண்டும் என அவர் மேலும் இதன்போது தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .