2025 மே 16, வெள்ளிக்கிழமை

புதிய அதிபர் வேண்டாமெனக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 11 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட  ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்துக்;கு புதிய அதிபர் நியமிக்கப்படவுள்ளமைக்கு  எதிர்ப்பு தெரிவித்து  இன்று வியாழக்கிழமை காலை அப்பாடசாலையின் முன்பாக  பெற்றோர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1990ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய அதிபரின் நிர்வாகத்தின்  கீழ் இப்பாடசாலை சிறப்பாக இயங்கிக் கொண்டிக்கின்றது. இதனைக் குழப்ப வேண்டாம்.

பாடசாலை நிர்வாகத்தில் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்க மட்டக்களப்பு கிளைச் செயலாளர் உதயரூபனின் பொறுப்பற்ற தலையீட்டைக் கண்டிக்கின்றோம். இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இப்பாடசாலையின்; முன்னேற்றத்தை தடுக்க வேண்டாம் என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதன்போது சம்பவ இடத்துக்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னாவிடம் பெற்றோர்கள் மகஜரொன்றை கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .