2025 மே 16, வெள்ளிக்கிழமை

மீண்டும் இரத்த ஆறு ஓடக்கூடாது: நஸீர் அஹமட்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 11 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்பட்டு மீண்டும் இந்நாட்டில் இரத்த ஆறு ஓடக்கூடாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட  உறுகாமம் அல்-அமான் வித்தியாலயத்தில் மூன்று மாடிக்கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், '20ஆவது சட்டத்திருத்தத்துக்குள்; சிறுபான்மைச் சமூகத்தினுடைய பிரதிநிதித்துவத்தை  எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பது தொடர்பில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஆலோசித்து வருகின்றது.

நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்தக் காலகட்டத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்கின்ற அரசியல் தலைமைத்துவங்களாக நாங்கள் ஒருபோதும் இருக்கமாட்டோம்.
சிறுபான்மைச் சமூகங்களுக்குத் தீங்கு விளைவிக்கின்ற சிறுபான்மைச் சமூக புல்லுருவி அரசியல்வாதிகளை துரத்தியடிக்கின்ற நாட்கள் வெகுதொலைவில்; இல்லை.

இதேவேளை, சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும்;; ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெளிவாகச் சொல்லிவைக்க விரும்புகின்றோம்'  என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .