2025 மே 16, வெள்ளிக்கிழமை

கூட்டு முன்னணி அரசியலை உருவாக்க வேண்டும்: சுபைர்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 11 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இனவாதிகளின் செயற்பாடுகளை முறியடித்து முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு  முஸ்லிம் கூட்டு முன்னணி அரசியலை உருவாக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள அலிஸாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்துக்கு தகுதி பெற்ற  மாணவர்களை  கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இங்கு   உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியிலும் காணமுடியவில்லை. தற்போது நடந்துகொண்டிருக்கக்கூடிய நிகழ்வுகள் முஸ்லிம் சமூகத்துக்;கு ஒரு நல்ல சமிக்ஞையாக இல்லை.

இவற்றுக்கெல்லாம் காரணம் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் பிளவுபட்டு நிற்பதுதான். முஸ்லிம்கள் பிளவுபட்டு நிற்பது இனவாதிகளுக்குச் சாதகமாக இருந்து வருகின்றது. இவ்வாறான நிலைமை முஸ்லிம் சமூகத்துக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

எனவே,இது தொடர்பில்  சிந்தித்து முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முஸ்லிம் கட்சிகள் 'முஸ்லிம் கூட்டு முன்னணி' என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.அதனூடாக தெளிவான முஸ்லிம் அரசியலைக் கொண்டு செல்லமுடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .