2025 மே 16, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் பெண்களை உள்ளடக்கிய கவுன்சில்

Princiya Dixci   / 2015 ஜூன் 11 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முஸ்லிம் பெண்களை உள்ளடக்கிய தேசிய முஸ்லிம் பெண்கள் சூறா கவுன்சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணியின் தலைவி தேசபந்து கலாநிதி ஜெசிமா இஸ்மாயில், நேற்று புதன்கிழமை (10)  தெரிவித்தார். 

முஸ்லிம் பெண்கள் சூறா கவுன்சில் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று மாலை காத்தான்குடி பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு போதே அவர் இவ்வாறு கூறினார். 

அத்துடன், 'தேசிய மட்டத்தில் முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் வகையிலும் இன ஐக்கியம், சமூக ஒருமைப்பாடு மற்றும் சகவாழ்வு போன்றவற்றை கட்டியெழுப்பும் வகையிலும் தேசிய முஸ்லிம் பெண்கள் சூறா கவுன்சில் அமைக்கப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக இவ்வாறான பிரதேச மட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன' என அவர் தெரிவித்தார். 

மேலும், 'இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்துக்கென 30 பேர் கொண்ட குழுவொன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் காத்தான்குடி பிரதேச மட்ட அங்குரார்ப்பண நிகழ்வு, விரைவில் இடம்பெறும்' என பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .