2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிறுவன் கடத்தப்பட்டதாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 12 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஆறுமுகத்தான்குடியிருப்பைச் சேர்ந்த 12 வயதுடைய  சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தான் ஒருவரினால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக அச்சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தச் சிறுவன் தற்போது  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபரை தேடி  ஏறாவூர் பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .