Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 13 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பிரசேத செயலாளர் பிரிவுக்குட்டபட்ட பாம் வீதி, மிக நீண்ட காலமாக செப்பனிடப்படாமலும் பராமரிக்கப்படாமலும் காணப்படுகின்ற நிலையில், தனது சொந்த நிதியைக்கொண்டு அவ் வீதியை செப்பனிட தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று சனிக்கிழமை (13) விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்;.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வீதி புனரமைக்கின்ற விடயங்களில் தொடர்ச்சியாக பல இழுத்தடிப்புக்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இதில் அதியுயர்; பட்சமாக, இந்த பாம் வீதி அமைப்பதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தத்தினையும் அரசியல் காழ்ப்;புணர்ச்சி காரணமாக அதிகாரத்தினை பயன்படுத்தி நிறுத்திவிட்டு அப்பழி என் மீது சுமத்தப்பட்டது.
இருந்த போதிலும் இப்பிரச்சினை காத்தான்குடி முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் மிகத் தெளிவாக விசாரிக்கப்பட்டு, என் மீது சுமத்தப்பட்ட அபாண்டம் நீக்கப்பட்டது.
எனினும், தொடர்;ந்தும் அப்பகுதியில் வாழும் மக்களும் பாடசாலை மாணவர்களுக்கும் அவ் வீதியை பயன்படுத்துபவர்;களும் தொடர்ச்சியாக பல கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
நிரந்தர தர்மம் ஒன்றை செய்வதனூடாக இறைவனிடமிருந்து கூலியை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் இவ் வீதியினை முற்று முழுதாக இறைவன் எனக்கு அருளிய சொந்த நிதியில் இருந்து 62 இலட்சம் ரூபாய் செலலவில்; கொங்க்ரீட் இட்டு செப்பனிட எண்ணியுள்ளேன்.
இதற்கான ஆரம்ப வைபவம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 14.06.2015 அன்று மாலை 4.30 மணிக்கு இடம்பெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
15 May 2025