2025 மே 16, வெள்ளிக்கிழமை

குழு மோதலில் இளைஞன் படுகாயம்

Thipaan   / 2015 ஜூன் 13 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெள்; பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இளைஞர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 6.00 மணியளவில் மண்டூர் 40ஆம் கொலணியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த யோகராஜா தனுஜன் (17வயது) இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

தலையில் கோடாரியால் கொத்தப்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விளையாட்டு மைதானத்தில் இளைஞர்களிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கமே மோதல் இடம்பெறக்காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .