2025 மே 16, வெள்ளிக்கிழமை

விபத்துக்களில் எழுவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 14 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வாழைச்சேனையிலும்  ஏறாவூரிலும்  இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ள இருவேறு விபத்துக்களில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புனாணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை வான் ஒன்று  வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததினால்,  ஆறு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வானில் கொழும்புக்குச் சென்றுவிட்டு,  திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் சாரதியும் அடங்கலாக காயமடைந்த இவர்கள், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சாரதி வாழைச்சேனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்களில் மூன்று சிறுவர்களும் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.

வாகன சாரதி உறங்கியதன்  காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளது என்று  விசாரணையிலிருந்து  தெரியவருகின்றது.

இதேவேளை, ஏறாவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .