2025 மே 16, வெள்ளிக்கிழமை

காத்தான்குடிக்கு பத்வாக் குழு உலமாக்கள் குழுவினர் விஜயம்

Princiya Dixci   / 2015 ஜூன் 17 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய வரலாற்று நூதனசாலையினை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பத்வாக் குழு உலமாக்கள் குழுவினர், நேற்று செவ்வாய்க்கிழமை (16)  பார்வையிட்டனர். 

இந்த நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகள் உருவ பொம்மைகள் குறித்து எழுந்துள்ள இஸ்லாமிய மார்க்க ரீதியான சர்ச்சையினை தீர்த்து வைக்குமாறும் இது தொடர்பில் மார்க்கத்தீர்ப்பினை வழங்குமாறும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையிடம் எழுத்து மூலம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இக்குழுவினர் அங்கு விஜயம் செய்து நூதனசாலையினையும் அங்கிருக்கும் உருவச்சிலைகளையும் பார்வையிட்டனர்.

இதன்போது முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த நூதனசாலையின் உருவாக்கத்துக்கான நோக்கம் அங்கு வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகள் தொடர்பாகவும் இது வைக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .