2025 மே 16, வெள்ளிக்கிழமை

'பூரணமாகும் அபிவிருத்திகளே பிரயோசனமானது'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 19 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அபிவிருத்திப் பணிகளை  பூரணமாக செய்துமுடிக்கும்போதே, பொதுமக்களுக்கு நூறு வீதம் பிரயோசனமுள்ளதாக அமையுமென்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் பள்ளிவாசலுக்கு சுற்றுமதில் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில்; உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு  தொடர்ந்து உரையாற்றிய  அவர்,   'எல்லா இடங்களிலும் அபிவிருத்திகளை முன்னெடுக்கவேண்டுமென்ற நிலையில்,  அபிவிருத்திகளை அரைகுறையாக செய்வதனூடாக பொதுப்பணம் வீணாகுவது மட்டுமன்றி, மக்களுக்கு பிரயோசனமற்றதாகவும் ஆகிவிடும்' என்றார்  

இந்த சுற்றுமதில் நிர்மாணத்துக்காக  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் 475,000 ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .