Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 20 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் கெவிழியாமடு பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்கள், தேர்தல் இடாப்பில் பதிவுசெய்வது தொடர்பில் கிராம சேவையாளரினால் சிபாரிசு செய்யப்படும் பெயர்கள், தமது அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்ட பின்னர் பெயர்கள் கணினி மூலம் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு மாத்திரம் 2015 தேர்தல் இடாப்பில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
கெவிழியாமடுவில் வெளிமாவட்டத்தினை சேர்ந்த அத்துமீறிய குடியேற்ற வாசிகளுக்கு தேர்தல் இடாப்பில் பதிவதற்கான விண்ணப்பம் வழங்கியதை இடைநிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கடிதம் ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பியிருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே உறுப்பினர் பொன்.செல்வராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைப்பிரதேசமான கெவிழியாமடுவில் வெளிமாவட்டத்தினை சேர்ந்த சிலர் அத்துமீறி குடியேறியள்ளனர். இது தொடர்பில் பட்டிப்பளை பிரதேச வாசி ஒருவரினால் கொழும்பு மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, 2015ஆம் ஆண்டிக்காக தேர்தல் இடாப்பு பதிவுசெய்யும் விண்ணப்பபடிவம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் முன்னாள் உதவி தேர்தல் ஆணையாளரிடமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியிருந்தேன். ஒருவர் வீட்டில் வசித்தால் விண்ணப்பப்படிவம் வழங்கலாம் என்றும் அதனை ஏற்றுக்கொள்வதோ, நிராகரிப்பதோ குறித்த பகுதி கிராம சேவையாளரின் கடமையென்று முன்னாள் உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
ஆனால், அங்கு அத்துமீறி குடியேறியுள்ளவர்கள் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்கள். அது ஒரு அரசாங்க காணியாகும். அந்த காணியை கைப்பற்றும் நோக்கில் இப்பகுதியை தற்காலிக வதிவிடமாக கொண்டுள்ளார்கள். அங்கு அவர்கள் நிரந்தரமாக வசிப்பதில்லை. சில வீடுகள் கூட பௌத்த பிக்கு ஒருவரினால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி காணி உத்தரவுப்பத்திரம் ஏதும் பெறாத நிலையில் காணியை பிடிக்கும் நோக்கில் குடியிருப்பவர்களுக்கு அதுவும் இவர்களுக்கு எதிராக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் இடாப்பு வழங்குவது முறையற்ற செயல் என சுட்டிக்காட்டியிருந்தேன்.
அத்துடன் வழங்கப்பட்ட விண்ணப்பபடிவங்களை இரத்துச்செய்யுமாறும் அவர்கள் நிரந்தரமாக வசிக்கின்ற அம்பாறை மாவட்டத்தில் பதிவினை மேற்கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்குமாறும் நான் மாவட்ட அரசாங்க அதிபரை கோரியிருந்தேன்.
இதுதொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ்; பதில் அனுப்பியுள்ள 1-06-2015 திகதியன்று சதாரண வதிவினைக்கொண்டிருந்தவர்களினதும் நிரந்தர வதிவை கொண்டவர்களினதும் விசி படிவங்கள் அப்பகுதி கிராம சேவை அலுவலருடன் இணைந்து கையேற்கப்பட்டதுடன் குறித்த மக்களின் தேசிய அடையாள அட்டை,பிறப்பு சான்றிதழ்,இதற்கு முந்தைய அவர்களின் வதிவு போன்றவை அலுவலகர்களால் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கையேற்கப்படும் விசி படிவங்கள் தேர்தல் இடாப்பில் சேர்த்துக்கொள்ளலாம் என கிராம சேவையாளரினால் சிபாரிசு செய்யப்பட்டு தமது அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்ட பின்னர், பெயர்கள் கணினி மூலம் பரிசீலிக்கப்பட்டு (இரட்டைப்பதிவு) தகுதியானவர்களை மாத்திரம் 2015 தேர்தல் இடாப்பில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்படும் என அரசாங்க அதிபர் எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலாக இது தொடர்பில் ஏற்கனவே கொழும்பு மேல் நீதிமன்றில் குறித்த பகுதியில் தேர்தல் இடாப்பு வழங்கப்பட்டது தொடர்பில் குறித்த வழக்கின் சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 May 2025