Thipaan / 2015 ஜூன் 20 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்தரைக்கட்டை கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இன்று சனிக்கிழமை அதிகாலை வரை யானைகள்; அட்டகாசம் நடத்தியுள்ளன.
இதனால் இரண்டு குடும்பங்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், இந்த வீடுகளில் இருந்த நெல், அரிசி, தானியங்களை யானைகள் உண்டுவிட்டுச் சென்றுள்ளன.
நேற்றைய தினம் இரவு முதல் இப்பிரதேசத்துக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட யானைகளை விரட்டுவதற்கு மக்கள் பெரும் சிரமமடைந்துள்ளனர். இருப்பினும் இரண்டு வீடுகள் சேதத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த சேதமடைந்த வீடுகளை இன்றைய தினம் அதிகாலை சம்பவ இடத்துக்குச் சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மக்களிடம்; உரையாடியதுடன், பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோரிடம் இவர்களுக்கு தற்காலிக இருப்பிடம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
கூலித் தொழிலில் ஈடுபட்டுவரும் மூன்று பிள்ளைகளையுடைய சின்னத்துரை ஆனந்தராசா, வடிவேல் பாலசுப்பிரமணியம் ஆகியோரது வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன.
யானைப்பிரச்சினைகள் காரணமாக இரவு தூக்கமின்றி உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு தமது வாழ்க்கையை நடத்தி வருவதாக இப்பிரதேசங்களின் மக்கள் தெரிவிக்கின்றர்.
இந்த வருடத்தில் மாத்திரம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 7 வீடுகள் இவ்வாறு யானையால் தாக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வரையான வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், கடந்த வாரத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்கான நட்ட ஈடுகள் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படுகிறது. இருப்பினும். பயிரழிவுகள், வீடு சேதமடைதல் சொத்துப்பாதிப்புகளுக்கு இதுவரையில் எந்த வித நட்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, பொது மக்கள் வாழும் கிராமங்களுக்குள் நுழையும் யானைகளை விரட்டி யானை பாதுகாப்பு வேலிகளுக்கு வெளியே விரட்டி அல்லது வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று விடாத வரைக்கும் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் இருக்கும்.
எனவே இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago