Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 01 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் இன்று(01)புதன்கிழமை காலை மட்டக்களப்பு –திருகோணமலை பிரதான வீதியிலுள்ள சந்திரா ஒழுங்கையில்; திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சமந்த வி.அபேவிக்ரம தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தற்காலிக கட்டடத்தில் இயங்கிவந்த தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம், கிழக்கு மாகாணசபையின் ஐந்து மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் திருகோணமலைக்கு சென்று பெறப்பட்டு வந்த சில சேவைகளும் இந்த நிலையம் ஊடாக வழங்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 May 2025