2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மட்டக்களப்பு வாவிகளில் ஆத்துவாழை தாவரம்; மீன்பிடிப்பதில் சிரமம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளில் கடந்த ஒரு மாதமாக ஆத்துவாழை தாவரம் பரவிக் காணப்படுவதால்,  தோணிகளில் சென்றும் வீச்சு வலைகளைக் கொண்டும் மீன்பிடிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இத்தாவரம் பரவிக் காணப்படுவதினால்  வாவிகளை நோக்கி  பாம்புகளும் முதலைகளும்  வருவதாகவும் இதனால், அச்சமாக உள்ளதாகவும் மீனவர்கள் கூறினர். இந்த நிலையில், தங்களது  வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையேற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கூறினர்.

இது தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்ஸன் குரூஸிடம் கேட்டபோது, 'வருடம் தோறும் கச்சான் காற்று வீசும் காலப்பகுதியில் ஆத்துவாழை  தாவரம் நன்னீருள்ள பகுதிகளிலிருந்து வாவிகளுக்கு தண்ணீரோடு அடிப்பட்டு  வருவது வழமையாகும். இன்னும் ஓரிரு வாரங்களில் இத்தாவரம் அழிந்துவிடும்' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X