Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 08 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு பல்கலைக்கழகத்தில் அநாமதேயமாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கையை ஒழிக்கவேண்டுமென்று அப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரீ.ஜயசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'கிழக்;கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஒருவரை தொடர்புபடுத்தி தற்போது துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் பல நல்ல மாற்றங்கள் இந்த அதிகாரியினால் நிகழ்ந்துள்ளன. சிறப்பான நிர்வாக காலகட்டத்தில் பிழையான வழிமுறைகளை கையாண்டு வசதிகளை அனுபவிக்க எண்ணுகின்றவர்கள், அவை தங்களுக்கு கிடைக்கவில்லை என்பதற்காக வீண்பழி சுமத்த முயற்சிக்கின்றனர். இதன் பிரதிபலிப்புகளே இந்த துண்டுப்பிரசுரங்கள். இது கவலைப்படக்கூடியதாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தங்களின் பிரச்சினைகளை நேரடியாக பேசித் தீர்ப்பதே நாகரிகமானது. எனவே, இதுவொரு உயர் கல்வி நிறுவனம் என்ற வகையில் அநாமதேய தாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதை தவிர்ப்பதே சிறந்தது.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
1 hours ago