Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 11 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாண சபையின் மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்பு செயலாளர் பதிவியிலிருந்தும் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தான் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட்டுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் சுபைர் மேலும் கூறினார்.
அவரது ஏறாவூர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விசேட ஒன்று கூடலில் அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,
சுமார் பத்து வருடமாக இக்கட்சிக்காக அயராது உழைத்து அதன் வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்புக்களைச் செய்திருக்கின்றேன். குறிப்பாக வடமாண, கிழக்கு மாகாண, ஊவா மாகாண தேர்தல்களில் கடுமையாகப் பிரசாரம் செய்திருக்கின்றேன்.
எனினும், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைப் பீடம் ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னைப் புறக்கணித்து முடிவெடுத்துள்ளது.
அதனால் தொடர்ந்து இந்தக் கட்சியுடன் இருந்து செயற்பட முடியாத நிலை எனக்கு உருவாகியிருக்கின்றது.
அதனால் அந்தக் கட்சியில் நான் வகித்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதற்கு முடிவெடுத்துள்ளேன்.
கட்சியில் தொடர்ந்து எனது இருப்பு சம்பந்தமாகவும் நான் விரைவில் முடிவொன்றை அறிவிப்பேன்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் விடயமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி சார்பாக யார், யார் போட்டியிடுவது என்ற முடிவு கூட அறிவிக்கப்படாத கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்க நான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை, மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை தனி ஒருவருக்கு மாத்திரம் வழங்கியதனை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் சுபைர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 May 2025