Suganthini Ratnam / 2015 ஜூலை 15 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
ஒரு குடையின் கீழ் தமிழ் மக்கள் நின்றுகொண்டு புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வை ஐந்து வருட காலத்தினுள் எட்டக்கூடியளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொண்டுசெல்ல வேண்டுமென்று கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) ஆதரவாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தமிழ் மக்களின் உரிமைக்காக வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர, நாங்களும் போராடுகின்றோம்' என்றார்.
'மேலும், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கவேண்டும். கடந்த ஜனாதிபதியின்; ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுப்பதற்கு முன்னரே, மக்கள் முடிவு எடுத்து வாக்களித்தனர். அந்த நிலைமை இந்தத் தேர்தலிலும் இருக்கவேண்டும்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .