2025 மே 15, வியாழக்கிழமை

ஆதாரம் உள்ளது: அப்துர் ரஹ்மான்

Princiya Dixci   / 2015 ஜூலை 15 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மஹிந்த அணியில் தான் இல்லையென அப்பட்டமான பொய்யை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அவர் மஹிந்த அணியில்தான் உள்ளார் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு, செவ்வாய்க்கிழமை (14) கிழக்குப் பிராந்திய தலைமையாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலானது நல்லாட்சியை ஏற்படுத்தும் தேர்தலாக அமையவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். நல்லாட்சியை நாங்கள் தொடர்ந்து கொண்டுசெல்வதா என்பது தொடர்பில் மக்கள் தீர்மானிக்கவேண்டும் என்றார்.

வெற்றிலைக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்கு கொண்டுசெல்லும் பணியை சிறுபான்மை சமூகம் ஒருபோதும் செய்யாது. 

நாங்கள் இனவாத கொள்கைகளையும் பிரதேச வாதங்களையும் எதிர்த்து இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளோம். மேலும், ஊழல் அற்ற அரசாங்கத்தை ஏற்படுத்தவும் எங்களது ஆதரவினை வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .