Suganthini Ratnam / 2015 ஜூலை 16 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் விசாரணை மேற்கொள்வதற்காக தற்போது கொழும்பு இரகசிய பொலிஸ் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டு மட்டக்களப்பில் கத்தோலிக்க தேவாலயமொன்றின் முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேர்தல் காலத்தில் எமது கட்சியின் மீதும் எமது தலைவர் மீதும் சேறு பூசும் செய்தியாகவே நாங்கள் பார்க்கின்றோம். எமது தலைவரை இரகசிய பொலிஸார் விசாரணை செய்யவேண்டும் என்றால், அவர்கள் செய்தி வெளியிட்டுவிட்டு விசாரிக்கமாட்டார்கள். இரகசிய விசாரணை இரகசியமாகவே நடைபெறும்.
எமது தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு இது தொடர்பில் எந்த அழைப்பும் வரவில்லை. இது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .