Suganthini Ratnam / 2015 ஜூலை 16 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் கிணற்றினுள் தவறி விழுந்து மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்ணகியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள வீட்டு வளவில் குளிப்பதற்காக சென்றபோது, மு.பிரசாந்தன் என்ற இந்தச் சிறுவன் தவறி விழுந்துள்ளான்.
இந்த நிலையில், சிறுவனை மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவந்ததாகவும் இருப்பினும், இந்த சிறுவன் வழியிலேயே மரணமடைந்திருந்ததாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .