Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 16 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசங்களை சுத்தப்படுத்துவதற்கு மாநகர சபை, இன்று வியாழக்கிழமை (16) தீர்மானித்துள்ளது.
கல்முனை யானைப்பந்தி கோயில் வீதி உட்பட சில வீதிகளில் தினமும் குவிக்கப்படுகின்ற திண்மக் கழிவுகளை தினசரி கிரமமாக அகற்றுவதற்கும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் சிரேஷ;ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இன்று நடைபெற்ற மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு உத்தியோகஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போதே இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பெருநாள் தினத்தில் பொழுதுபோக்குகளுக்காக கடற்கரைப் பிரதேசங்களில் பொதுமக்கள் கூடுவதைக் கருத்திற்கொண்டே அப்பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அசுஹர் உட்பட மற்றும் பல அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025