Suganthini Ratnam / 2015 ஜூலை 17 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம்
கதிர்காம உற்சவத்துக்கு யாத்திரை சென்ற வாழைச்சேனை, விநாயகபுரத்தை சேர்ந்த மேகவல்லி ரவிச்சந்திரன் வயது (43) என்பவர் நெஞ்சுவலி காரணமாக மூச்சுத்தினறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த புதன்கிழமை காலை கதிர்காமம் செல்லும் குழுவினருடன் பேருந்தில் இவர் சென்றதாகவும் பின்னர், உகந்தை முருகன் கோவிலில்; அன்றையதினம் மாலை தரித்துநின்று நேற்று வியாழக்கிழமை காலை காட்டுவழியாக யாத்திரை குழுவினருடன் இவர் யாத்திரரை செய்துள்ளார். இதன்போது, பெருவெட்டை இடத்தில் இவரின் உடலில் சோர்வு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு கடமையிலிருந்த இராணுவத்தினரின் உதவியுடன் பாணம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையிலேயே இவர் உயிரிழந்தார்.
தற்போது சடலம் பாண வைத்தியசாலையில் உள்ளது. மரண விசாரணைகளின் பின்னர் சடலத்தை சொந்த இடத்துக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .