Suganthini Ratnam / 2015 ஜூலை 17 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பிறந்து ஒரே நாளேயான சிசுவொன்று புதைக்கப்பட்ட சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கிராமத்தை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர் தனக்கு வயிற்றுவலியும் இரத்தப்போக்கும் இருப்பதாகக் கூறி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு வைத்தியப் பரிசோதனை மேற்கொண்டபோது, இவர் சிசுவொன்றை பிரசவித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இவரிடம் விசாரித்தபோது தான் பிரசவித்த சிசுவை நிலத்தில் புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு நேற்று வியாழக்கிழமை இரவு சென்ற பொலிஸார் துணிகளினால் சுற்றி உரப்பையில் இட்டு புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்தச் சிசு, இளம் தாயின் குடிசைப்பகுதி அமைந்துள்ள மணல் பகுதியில் புதைக்கப்பட்டிருந்ததாக அந்தப் பகுதியின் கிராம அலுவலர்; நிர்மலா சுரேஷ்குமார் தெரிவித்தார்.
தாய் கைதுசெய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .