2025 மே 15, வியாழக்கிழமை

'அரசியல் தீர்வை நோக்கி ஒரு துரும்பைத்தானும் அசைத்தாரா?'

Princiya Dixci   / 2015 ஜூலை 17 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

'தமிழ்த் தலைமையை மாற்ற வேண்டும் என கோரும் டக்ளஸ், இதுவரை காலமும்; அரசியல் தீர்வை நோக்கி ஒரு துரும்பைத்தானும் அசைத்தாரா?'என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (16) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

'வெற்றிலை விரட்ட, யானை துரத்த, தூசு படிந்த வீணையைக் கையில் எடுத்துள்ள டக்ளஸ், ஐந்து மாத கால அரசாங்கம், தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவில்லையென்று கூறுகிறார். இதுவரை காலமும் அவர் அரசியல் தீர்வை நோக்கி ஒரு துரும்பைத்தானும் அசைத்தாரா?

மத்தியில் கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும் மலர்ந்துவிட்டது. வடக்கு, கிழக்கு இணைந்துவிட்ட தமிழ்த் தாயகம் பெற்றுத்தந்துவிட்ட டக்ளஸ், அடுத்ததாக தமிழ்த் தலைமையை மாற்ற வேண்டும் என்கின்றார். அரசியலில் வாக்குத் தவறாத அவர் நிச்சயம் இதையும் செய்வார் என்று நம்புவோம். 

ஆனால், இதைச் செய்யுமுன் இம்முறை யாழ். மக்கள் வீணையின் அபசுரத்துக்கு முடிவுகட்ட முடிவெடுத்து விட்டார்கள் என்பதை அவர் உணர்ந்து கொள்ளவேண்டும் என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .