Suganthini Ratnam / 2015 ஜூலை 19 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யோ.சேயோன்
நடைபெறவுள்ள தேர்தலுக்கு பின்னரே ஆட்சி மாற்றத்தின் இலக்கை அடையமுடியும். ஆட்சி அமைக்கக்கூடியவர்கள் யார் என்றாலும், எங்களுக்கு பரவாயில்லை' இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தாந்தாமலை 40ஆம் வட்டை கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு என்பது, கடந்த 65 வருடகாலத்தில் பட்ட துன்பங்கள், அவலங்கள், தியாகங்கள் ஆகியவற்றுக்கு ஒரு பரிகாரமாக அரசியல் தீர்வை பெறவேண்டும். இதை அடைவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விகிதாசார தேர்தலை பொறுத்தவரை 4 தமிழர்களும் ஒரு இஸ்லாமிய சகோதரரும் வரவேண்டும். மூன்றும் இரண்டும் என்பதே ஒத்துவராது.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை 16 அங்கிகரிக்கப்பட்ட அரசியல்க் கட்சிகளும் 30 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. எல்லோரும் வெற்றி பெறமுடியாது. 3 அல்லது 4 கட்சிகள் வெற்றி பெறலாம். ஆனாலும், தமிழ் மக்களாகிய நீங்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் 4 ஆசனங்களை பெறமுடியும்.
ஐக்கிய தேசியக் கட்சி, பொதுசன ஐக்கிய முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் தலைமை வேட்பாளர்கள் ஓட்டமாவடி, காத்தான்குடி ,ஏறாவூர், ஆகிய இடங்களை சோந்தவர்கள். அவர்களுக்கு வாக்கு சேர்க்க அக்கட்சிகள் இரண்டில் தமிழர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்கள் அக்கட்சிகளின் தரகர்கள். எனவே விழிப்பாக இருங்கள். தமிழர்கள் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற நிலையிலிருந்து மாறக்கூடாது.' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .