2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 22 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர்  ஜேம்ஸ் டொரிஸுக்கும்  மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ஸுக்கும் மாவட்ட செயலாளரின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை சந்திப்பு நடைபெற்றது.

தற்போதைய நிலை, கடந்தகால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், தற்போதைய தேவைகள், மக்களின் வாழ்வாதாரங்கள், கல்வி, தொழில் வாய்ப்புகள், இளைஞர்களது பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாகவும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச்செயற்பாடுகள் கலந்துரையாடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X