Gavitha / 2015 ஜூலை 23 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ.ஹூஸைன்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக முஸ்லிம் உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி முஸ்லிம் அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் கடமைகளுக்கான மண்டப ஒழுங்கு, போக்குவரத்து,அத்தியாவசிய சேவை என பல பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுள் முஸ்லிம்கள் எவருமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலிருந்து இந்தப் புறக்கணிப்பு இடம்பெற்றுவருவதாக முஸ்லிம் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் வரை கட்டுப்பாட்டுப் பிரிவில் முஸ்லிம் அதிகாரிகள் இருந்தனர். அந்தப் பதவி இன்று அவர்;களிடமிருந்து மீளப் பெறப்பட்டுள்ளது
எனவே,தேர்தல் ஆணையாளர் இது தொடர்பில் கவனம் செலுத்தி முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த உத்தியோகத்தர்களையும் கடமைகளில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago