Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருப்பது போல ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 45,000 வாக்குகளைப் பெற்றால் நான் வெற்றிப்பெற்றாலும் நாடாளுமன்றம் செல்லமாட்டேன். அதேபோல்,45,000 வாக்குகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெறாவிட்டால் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவரது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்வாரா என முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 45,000 வாக்குகளைப் பெற்று ஆசனத்தை பெறுமென தெரிவித்திருந்தார். முஸ்லிம் காங்கிரஸினால் அந்த வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருபோதும் பெறமுடியாது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு ஆசனங்களை பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களைப் பெற்று முதலிடத்துக்கு வந்தால் ஐக்கிய தேசியக் கட்சித்தான் அடுத்த இடத்துக்கு வரும். இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் கட்டியெழுப்பி இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தமது செயற்றிட்டங்களை மேற் கொண்டு வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் இன ரீதியான துவேசக்கருத்துக்களை விதைத்து பிரச்சாரம் செய்து வருகின்றது என்றார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago