Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கையை கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் தற்போது மேற்கொண்டுள்ளது.
'மக்களே வாக்களிப்பது உங்கள் கடமை' என்னும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்களை வழங்கி இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் மிகவும் குறைந்த நிலையிலிருந்தது. இதை அதிகரிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் அப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினருமான கே.சங்கர் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் மிகவும் குறைந்த அளவிலிருந்தது. 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 43 சதவீதமானோர் வாக்களிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தேர்தலில் வாக்களிப்பது வாக்காளர்களின் உரிமையும் கடமையும் என்பதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago