2025 மே 14, புதன்கிழமை

மு.கா ஆதரவாளர்களின் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் காயம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
 
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை நூரியா முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை (14) ஜூம்ஆ தொழுகையின் பின் பள்ளிவாசல் தலைவரை தாக்க வந்த குழுவினரின் தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரித்தனர்.

பிறைந்துரைச்சேனை நூரியா முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் இன்று இடம்பெற்ற ஜூம்ஆ தொழுகையின் பின்னர் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக பள்ளிவாசல் தலைவரிடம் விளக்கம் கேட்க வந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், பள்ளிவாசல் தலைவரை தாக்க முற்பட்ட போது அதனை தடுக்க முயற்சித்த இளைஞர்களே காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை சம் வீதியைச் சேர்ந்த எம்.எல்.மதீன் (வயது 32) மற்றும் பிறைந்துரைச்சேனை ஐஸ் பெக்டரி வீதியைச் சேர்ந்த காதர் இஸ்பாக் (வயது 30) என்ற இளைஞர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .