Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கத் தக்க வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சறோஜினிதேவி சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 199 வாக்களிப்பு நிலையங்களும் கல்குடாவில் 115 நிலையங்களும் பட்டிருப்பில் 100 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
2014ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 365,167 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 172,499 வாக்காளர்களும் கல்குடாவில் 105,056 பேரும் பட்டிருப்பில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago