Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நடைபெற்றுமுடிந்த பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐந்து பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் ஜக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், மட்டக்களப்பு மாவட்டத்தில் அலிசாஹிர் மௌலானா, அம்பாறை மாவட்டத்தில் ஜக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தயா கமகே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எம்.ஜ.மன்சூர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் வெற்றிடத்துக்கு அவர்கள் சார்ந்த கட்சிகளின் சார்பில் அடுத்தபடியாக விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதாக அக்கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கிழக்க மாகாணசபை உறுப்பினர்களாக இருந்த பலர் இத்தேர்தலில் போட்டியிட்டபோதிலும், தோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதில் முன்னாள் முதலமைச்சர்களான நஜீப் அப்துல் மஜீத், சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரும் அடங்குவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .