Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாணசபை உறுப்பினரான இம்ரான் மஹ்ரூப்பின் இடத்துக்கு அருண சிறிசேன நியமிக்கப்படவுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 17ஆம் திகதி நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில்; போட்டியிட்ட இம்ரான் மஹ்ரூப் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியான விருப்பு வாக்குகளை பெற்று அப்துல்லாஹ் மஹ்ரூப்பும் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பட்டியலில் மூன்றாவது இடத்திலுள்ள அருண சிறிசேன கிழக்கு மாகாணசபை உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .