Kanagaraj / 2015 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள புணானைக் கிராமத்தில், இன்று வியாழக்கிழமை (20) மாலை மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மயிலந்தனை புணாணையைச் சேர்ந்த முத்துக்கருப்பன் கணேசன் வயது (67) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
தனது வயலுக்கு சென்று காவல் கடமையில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம், வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .