2025 மே 14, புதன்கிழமை

'சிறந்த ஆலேசனைகளை வழங்கவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

'எமது மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும்  இன ஒற்றுமைக்காகவும் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு என்னுடன் இணைந்துகொண்டு உங்களின் சிறந்த ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாசலுக்கு நேற்று வியாழக்கிழமை வருகை தந்தபோது, அங்கிருந்த மக்களுடன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'நாட்டில் நல்லாட்சியின் பின்னர் கிடைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களும்; அபிவிருத்தி செய்யப்படும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதி முஸ்லிம்; பிரதேச மக்களின் அதிகமான வாக்குகளை நான் எதிர்பார்த்திருந்தேன். அதேபோன்று அம்மக்கள் எனக்கு வாக்களித்திருந்தாலும், அதனுடன் காத்தான்குடி, ஏறாவூர் பிரதேச முஸ்லிம் மக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களும் பரவலாக எனது வெற்றிக்காக அதிக பங்களிப்பை செய்திருக்கின்றார்கள் அவர்கள் செய்த அந்த உதவியை என்னால் மறக்க முடியாது. மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் எங்களது அணியில் வந்து இணைந்துகொள்ளுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்'  என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .